சிந்திக்க சில விஷயங்கள்.

காலம்:


இன்றைய தினத்தை முழுதாக அனுபவி; நாளைய தினத்தைக் குறைவாக நம்பு.

கடந்து போன நேரம் ஒருபோதும் திரும்பி வருவதில்லை.

நேரத்தை வீணாக்காதே; வாழ்க்கை உண்டாக்கப்பட்டதே அதனால்தான்.

அதிகாலையில் எழுகின்ற பறவைதான் நெடுந்தூரம் செல்லும்.

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், அது இதயத்தின் இசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், அது சக்தியின் பிறப்பிடம்
விளையாட நேரம் ஒதுக்குங்கள், அது இளமையின் இரகசியம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள், அது அறிவின் ஊற்று.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள், அது வெற்றியின் விலை.

நீதிபதிகளை விட காலம்தான் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.
காலத்தை வீணாக்குவது தன்னைத்தானே கொள்ளையடிப்பதற்குச் சமம்.
காலத்தைவிட பழிவாங்கக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
காலத்தின் கர்பப்பையில்தான் எதிர்காலம் படுத்துக்கிடக்கிறது.
இன்று செய்ய முடிந்ததை நாளைவரை ஒருபோதும் தள்ளிப்போடாதே.

No comments:

Post a Comment