சிந்திக்க சில விஷயங்கள்-2

வாழ்க்கை:


தனியாகவே நாம் உலகில் நுழைகிறோம், தனியாகவே பிரிந்து போகிறோம்.

மற்றவர்களுடய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.


ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த முயற்ச்சிப்பவன் யாரையும் திருப்திப்படுத்தவில்லை.

வாழ்க்கை என்பது தனக்காக வாழ்வதன்று, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காக வாழ்வது.

வாழ்க்கையில் ஒரு இலட்சியம் வேண்டும், இலட்சியம் இல்லாத மனிதன் மிருகத்திற்கு சமானம்.

வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்.

வாழ்க்கையில் நேரிடும் சில சந்திப்புகள் விதியின் கட்டளை போல் தோன்றும்


வாழ்நாள் குறைவுதான், காலத்தை வீணாக்கி அதை மேற்கொண்டு குறைக்கிறோம்


நேரத்தை அறிந்தே வீணாக்குபவன் வாழ்க்கையின் அருமையை உணராதவன்

No comments:

Post a Comment