மனிதனின் இயற்கை குணம்

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்துவிட்டது. தத்தளித்தது


தண்ணீருக்குள் கையைவிட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து, தேளை தவறி தண்ணீரில் விட்டார் துறவி. மாறுபடியும் கருணையோடு தூக்கினார். மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை.


கரையிலிருந்து ஒருவர் கேட்டார். ‘சுவாமி, தேள்தான் கொட்டுகிறதே, திரும்பத் திரும்ப ஏன் காப்பாற்றுகிறீர்கள். விட்டுவிடவேண்டியதுதானே?


துறவி சொன்னார்.” கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கைகுணம். அதனுடைய இயற்கையை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் நான் ஏன் விட வேண்டும்.

-பகவான் ராமகிருஷ்ணர்.No comments:

Post a Comment