யார் நம்பர் ஒன் - எம்.ஜி.ஆர்.


நம்பர் 1 இடம் நிலையில்லாதது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் மூலம் அழகாக விளக்குகிறார்.

எம்.ஜி.ஆர்., எழுதுகிறார்:
என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது.

அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர்.

அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று.

படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.

நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.

இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம்.

அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.

எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர்.

மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.

நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.

மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர்.

இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. 

கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!

ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.

— கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது

உழைத்து, சம்பாதித்து உணவைப் பெறு!


இன்றைய காலத்தில், இலவசங்களுக்காகவே மக்கள் ஆவலாய் பறப்பதும். அரசியல்வாதிகள், பொது மக்களுக்கு அற்பத்தனமான இலவசத்தை அள்ளித் தந்து, தன்மானத்தையே அடகு வைக்கும் அவல நிலையை காணும் போது, இதோ, காந்திஜியின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்:

ஒருமுறை, காந்திஜி, பம்பாய் சென்றிருந்தார். ஒரு நண்பர், அவரை விருந்துண்ண தம் இல்லத்துக்கு அழைத்தார். அழைப்பை ஏற்று, காந்திஜியும் அவர் தம் இல்லம் சென்றார். சிறிது நேரம் கழித்து, உணவு உண்ணலாம் என கூறிய காந்திஜி, இதோ வருகிறேன் என கூறி, கழிப்பறைக்கு சென்றார்.

அரைமணி நேரமாயிற்று, காந்திஜி வரவில்லை. நண்பர், கழிப்பறை இருக்கும் இடத்துக்கு சென்றார். அப்போது தான் காந்திஜி வெளியே வந்தார். தற்செயலாக அந்த நண்பர், கழிப்பறையை பார்த்தார். அதை காந்திஜி சுத்தம் செய்துள்ளது தெரிய வர, மிகவும் வருத்தப்பட்டு, "பாபுஜி... நீங்கள் எங்கள் விருந்தினர்; நீங்கள் சுத்தம் செய்திருக்கக் கூடாது. சொல்லியிருந்தால், நாங்களே சுத்தம் செய்திருப்போம்...' என்றார்.

அதற்கு காந்திஜி, "இப்போது உங்கள் இல்லத்தில் உணவு சாப்பிடப் போகிறேன். இரண்டு சப்பாத்திகளை சாப்பிடலாம். அதன் விலை எட்டணா. அந்த எட்டணாவுக்கு, நான் ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும். அதுதான், நான்கழிப்பறையைச் சுத்தம் செய்து விட்டேன். இதற்கு கூலி அது. இப்போது, நான் நிம்மதியாக சாப்பிடலாம். இந்தியாவில் எவரும், எதையும், எப்போதும் இலவசமாக பெறுதல் கூடாது...' என்றார்.

"உழைத்து, சம்பாதித்து உணவைப் பெறு!' — இதுவே காந்திஜியின் கொள்கை. ஆனால், இந்தியாவின் இன்றைய நிலையோ... அய்யகோ! நெஞ்சுப் பொறுக்குதில்லையே... இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டாலே நெஞ்சுப் பொறுக்குதில்லையே!

சிந்திக்க சில விஷயங்கள்-2

வாழ்க்கை:


தனியாகவே நாம் உலகில் நுழைகிறோம், தனியாகவே பிரிந்து போகிறோம்.

மற்றவர்களுடய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.

சிந்திக்க சில விஷயங்கள்.

காலம்:


இன்றைய தினத்தை முழுதாக அனுபவி; நாளைய தினத்தைக் குறைவாக நம்பு.

கடந்து போன நேரம் ஒருபோதும் திரும்பி வருவதில்லை.

நேரத்தை வீணாக்காதே; வாழ்க்கை உண்டாக்கப்பட்டதே அதனால்தான்.

அதிகாலையில் எழுகின்ற பறவைதான் நெடுந்தூரம் செல்லும்.மனிதனின் இயற்கை குணம்

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்துவிட்டது. தத்தளித்தது


தண்ணீருக்குள் கையைவிட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து, தேளை தவறி தண்ணீரில் விட்டார் துறவி. மாறுபடியும் கருணையோடு தூக்கினார். மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை.


கரையிலிருந்து ஒருவர் கேட்டார். ‘சுவாமி, தேள்தான் கொட்டுகிறதே, திரும்பத் திரும்ப ஏன் காப்பாற்றுகிறீர்கள். விட்டுவிடவேண்டியதுதானே?

பிறர் உங்களைத் திட்டினால்...

பிறர் உங்களைத் திட்டினால்...

ஒருமுறை புத்தர் தனது பிரதான சீடரான ஆனந்தாவுடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார்


புத்தரைப்பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண்மணி, சோம்பேறியே! கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது. உழைத்துச் சாப்பிட உனக்கு என்ன கேடு...?என்று திட்டி விரட்டினாள்.


ஒரு பெண், தனது குருவை இப்படித் திட்டிவிட்டாளே..’ என்று சீடரின் மனம் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்தது.

தயவு செய்து எனக்கு உத்தரவு கொடுங்கள். உங்களைத் திட்டிய அந்தப் பெண்ணுக்குச் சரியான பாடம் புகட்டிவிட்டு வருகிறேன்!” என்று ஆனந்தா புத்தரிடம் அனுமதி கேட்டார்.

சிந்திப்போம்.

ஹலரத் ஈசா, தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்

அப்போது அவர் சீடர்களை பார்த்து உங்கள் சகோதரன் ஒருவன் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.  அவன் ஆடை காற்றில் விலகிக் கிடக்கிறது. இதை பார்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

இறைவனைக் காணமுடியுமா?

ஆசிரியரை பார்த்து மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் இறைவனை காணலாம் என்கிறீர்கள். என் எதிரில் இறைவனைக் காட்டுங்கள் அப்பொழுதுதான் நான் நம்புவேன் என்றான்.

என்னுடன் வா உனக்குக் காட்டுகிறேன் என்ற ஆசிரியர் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றார்.

உணர்வே மருந்து.

உணர்வே மருந்து:
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

ஒரு ஜென் சீடர் பான்காய் என்கின்ற குருவிடம் சென்று வினயமாகச் சொன்னார். குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை அதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்.

அதற்கு பான்காய் சொன்னார். ”இது மிகவும் ருசியாக இருக்கிறது. உன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் காட்டுவாயாக. நான் பார்க்கவேண்டும்,” என்றார்.

அதற்கு அவன், “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. என்வே என்னால் காட்ட முடியாது.”

அப்படியானால் உன்னிடம் இருக்கும் போது நீ அதை கொண்டு வருவாயாக”

அதற்கு அவன் ”என்னால் அதைக் கொண்டு வர முடியாது. ஏனென்றால் திடீரென அது ஏற்படுகிறது. நான் உங்களிடம் வருவதற்குள் அது நிச்சயம் காணாமல் போய்விடும்,” என்று கூறினான்.

குரு சொன்னார்:

எது வீரம் ?


பொது வாழ்வில் பதவி போனால் மரியாதை இல்லை.
தனி வாழ்வில் மனைவி போனால் மானமே இல்லை.


இரண்டையும் இழந்து தன் உறுதியால் இரண்டையும் தன் காலில் விழ வைத்த தன்னம்பிக்கைத் தலைவன் - யார்?

புலியை எதிர்த்துப் போராடுவோம்

வழிபாடு-பேரம் அல்ல

பிரார்த்தனைஎன்பது, பேரம் பேசுவது இல்லை; யாசகம் கேட்பதுமல்ல; எதையாவது எப்பொழுதும் கேட்டுக்கொண்டு இருப்பதில்லை. மாறாக, கவனிப்பதில் இருக்கிறது.

புனித தலங்களில் நீராடுவதால் ஒருவரின் பாவங்கள் கரையுமா?

பிரார்த்தனைகள்

சடங்குகள், பூஜைகள், வழிபாடுகள்
இவற்றையும் மீறியது பக்தி.
சடங்குகள் பக்தி செய்கிறோம் என்கிற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன.

புனித தலத்திலே நீராடினால் நம் பாவங்களெல்லாம் கரைந்துவிடும் என நினைத்து, தெரிந்தே பாவங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

சல்லடையில் தண்ணீரை எப்படி நிரப்புவது?

இறைவன் இறந்துவிட்டார்.(God is Dead)
Fredrich Nietzsche தன்னுடைய நூலில், புத்தி சுவாதீனமற்றவன் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நல்ல வெளிச்சமான பகல்பொழுதில் விளக்கையேற்றிக் கொண்டு சந்தைப் பகுதிக்குச் சென்று தொடர்ந்து கூக்கிரலிட்டான்.
நான் கடவுளைத் தேடுகிறேன்;
நான் கடவுளைத் தேடுகிறேன்.”

இழைகளாலான இணையம்

இழைகளாலான இணையம்

“சங்குத் துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.

ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.

ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.

ஒரு கவிதையுண்டு

வெட்டுப்பட்டால் பெட்டிக்குள்...

வெட்டுப்பட்டால் பெட்டிக்குள்...
பெட்டிக்கு வந்த பிறகு
எல்லோருமே சமம்-
சதுரங்கக் காய்கள்
சதுரங்கக் காய்களில்
ராணிகளுக்குத் தான் மதிப்பு
அவற்றால் தான் யாரையும்
எப்படியும் வெட்ட முடியும்-
கவிழ்க்க முடியும்-
அழிக்க முடியும்.
மேலோட்டமாக்ப் பார்த்தால்
ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம்.

இறைவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா?

நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஒருவிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் வாழும் நாமும் ஒரு ஆற்றின் ஓட்டத்தைப் போன்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம். நமது செயல்கள் நம் விருப்பப்படியே நிகழ்கின்றன எனவும் நாம் நினைக்கிறோம். ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்தால் அப்படி இல்லை என்று புரியும். எதோ ஒரு பெரும் இயந்திரத்திற்குள் நாம் சுழன்று கொண்டிருக்கிறோம்.

சத்திய சோதனை

மனத்தூய்மை இல்லாதார் என்றுமே கடவுளை அறிதல் இயலாது
-மகாத்மா காந்தியின் சுய சரிதை - அதிலிருந்து சில வரிகள் நம் சிந்தனைக்கு

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொருபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப்போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும்.

என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபச்சாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார் - மகாத்மா காந்தியின் சத்தியசோதனையிலிருந்து

”என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபச்சாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். 

படித்ததில் பிடித்தது-8

சுதந்திரம்.

சுதந்திரம் ஒரு சொப்பனமயமான பொய்.

உண்மையில் நாம் சுதந்திரத்தை விரும்புவதில்லை, சிறைகளையே விரும்புகிறோம்.

படித்ததில் பிடித்தது-7

நாகரிகமானவராக வளருவோம்

வெற்றி வியர்வையினால்தான் எழுதப்படுகறது.

சாதனைக்கட்டிடம் வேதனைக்கற்களினால்தான் எழுந்து விளங்குகிறது.

நாகரிகம் தெரிந்தவர்கள் பண்புள்ளவர்கள் பொருளும் அளிப்பார்கள் மன்னிப்பும் அளிப்பார்கள்.

படித்ததில் பிடித்தது-6

மன்னித்தல்

மன்னித்தல்,அதில்தான் இருக்கிறது, ஓர் ஆன்மீக சாதகனது வாழ்க்கையில் உள்ள ரகசிய அழகு.  

மன்னிக்கவிடில், கோபதாபங்கள் உள்ளேயே கனத்துக்கொண்டிருக்கும். 

இதயம் லேசாக இருந்தால்தானே நம்மை நாமே உயர்த்திக்கொண்டு தியான சிகரங்களை எட்டிப் பிடிக்க முடியும்.

படித்ததில் பிடித்தது-5

மெய்யுணர்வு தோண்றுவது எப்போது?
எது கிடைத்து விடுகிறதோ அது சாதாரணமாகத் தெரிகிறது.
எங்கே சுலபமாக வாழ்கிறோமோ, அங்கே பாலைவனமாகக் காட்சியளிக்கிறது.
ஒன்றில் நின்று கொண்டே இன்னொன்றை நோக்கிக் கொண்டிருக்கும் பொய்யான வாழ்க்கையிலேயே மனித வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.

படித்ததில் பிடித்தது-4

எங்கே நிம்மதி
உங்கள் நிம்மதியின்மைக்கு நூறு சதவிதம் நீங்கள்தான் பொறுப்பாளி.
கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு.
மூன்றுவேளைக்கும் திண்டாட்டம் போடுகிறவர்கள் சாகிறவரை எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பவர்களும் உண்டு.
வாழ்க்கையில் முதல் முறையாக நாம் எப்பொழுது நிம்மதியை இழக்க ஆரம்பிக்கிறோம்?

படித்ததில் பிடித்தது-3

வாழ்க்கைக்கு பணம் அவசியாமா?
பணம் அவசியமானதுதான்.  இருக்க இடம் உடுக்க உடை உயிர்வாழ்வதற்கு உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பெறவும் மானமுடன் வாழவும் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது.

‘எனக்கு ஆசை எதுவும் கிடையாது. எனக்கு பணம் தேவை இல்லை’ என்று சொல்லிக்கொள்வதில் சிலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள் வேதனை நிறைந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வர வேண்டியிருக்கும். 

வாழ்க்கையில் பணம் தேவைதான், ஆனால் பணம் சம்பாதிப்பது ஒன்றே ஒருவனுடைய முழு வாழ்க்கையை பரிணமிக்கும்படி அனுமதிக்கக் கூடாது.

பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்க்கையை சிறிது கூட அனுபவிக்காமல் தன்னை அழித்துக்கொள்வது முட்டாள்தனமாகும்.

படித்ததில் பிடித்தது-2

எதை இழந்து எதைப்பெறுகிறோம்.
ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள். 
காலையில் எழுந்தவுடன் அழகாக எழுந்துவரும் சூரியனை ரசிக்க நமக்கு மனமில்லை. குழந்தையோடு கொஞ்ச நேரம் கொஞ்சிவிளையாட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.
பணம் பணம் பணம் இந்த ஒன்றுக்காக நம் வாழ்க்கையின் சகலவிதமான அற்புதங்களையும் இழந்து அல்லல்படுகிறோம்.
நீங்கள் என்னதான் ஓடியாடி உழைத்தாலும் லட்ச லட்சமாக, கோடி கோடியாக சம்பாதித்தாலும் உங்களுக்கு மிஞ்சப்போவது என்ன?

ஜாதகம், ஜோதிடம் இவையெல்லாம் உண்மையா?ஜாதகம், ஜோதிடம் இவையெல்லாம் உண்மையா?
அனைவர் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி.

இந்த கேள்விக்கு பதில் தேடும் முன், நம்மில் எத்தனை பேருக்கு ஜோதிடத்தில் அதன் அடிப்படையான நட்சத்திரம்,ராசி,நவாம்சம், புத்தி, தசாபுத்தி, கிரகம் பற்றிய விவரம் தெரியும்.