உழைத்து, சம்பாதித்து உணவைப் பெறு!


இன்றைய காலத்தில், இலவசங்களுக்காகவே மக்கள் ஆவலாய் பறப்பதும். அரசியல்வாதிகள், பொது மக்களுக்கு அற்பத்தனமான இலவசத்தை அள்ளித் தந்து, தன்மானத்தையே அடகு வைக்கும் அவல நிலையை காணும் போது, இதோ, காந்திஜியின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்:

ஒருமுறை, காந்திஜி, பம்பாய் சென்றிருந்தார். ஒரு நண்பர், அவரை விருந்துண்ண தம் இல்லத்துக்கு அழைத்தார். அழைப்பை ஏற்று, காந்திஜியும் அவர் தம் இல்லம் சென்றார். சிறிது நேரம் கழித்து, உணவு உண்ணலாம் என கூறிய காந்திஜி, இதோ வருகிறேன் என கூறி, கழிப்பறைக்கு சென்றார்.

அரைமணி நேரமாயிற்று, காந்திஜி வரவில்லை. நண்பர், கழிப்பறை இருக்கும் இடத்துக்கு சென்றார். அப்போது தான் காந்திஜி வெளியே வந்தார். தற்செயலாக அந்த நண்பர், கழிப்பறையை பார்த்தார். அதை காந்திஜி சுத்தம் செய்துள்ளது தெரிய வர, மிகவும் வருத்தப்பட்டு, "பாபுஜி... நீங்கள் எங்கள் விருந்தினர்; நீங்கள் சுத்தம் செய்திருக்கக் கூடாது. சொல்லியிருந்தால், நாங்களே சுத்தம் செய்திருப்போம்...' என்றார்.

அதற்கு காந்திஜி, "இப்போது உங்கள் இல்லத்தில் உணவு சாப்பிடப் போகிறேன். இரண்டு சப்பாத்திகளை சாப்பிடலாம். அதன் விலை எட்டணா. அந்த எட்டணாவுக்கு, நான் ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும். அதுதான், நான்கழிப்பறையைச் சுத்தம் செய்து விட்டேன். இதற்கு கூலி அது. இப்போது, நான் நிம்மதியாக சாப்பிடலாம். இந்தியாவில் எவரும், எதையும், எப்போதும் இலவசமாக பெறுதல் கூடாது...' என்றார்.

"உழைத்து, சம்பாதித்து உணவைப் பெறு!' — இதுவே காந்திஜியின் கொள்கை. ஆனால், இந்தியாவின் இன்றைய நிலையோ... அய்யகோ! நெஞ்சுப் பொறுக்குதில்லையே... இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டாலே நெஞ்சுப் பொறுக்குதில்லையே!

No comments:

Post a Comment