பிறர் உங்களைத் திட்டினால்...

பிறர் உங்களைத் திட்டினால்...

ஒருமுறை புத்தர் தனது பிரதான சீடரான ஆனந்தாவுடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார்


புத்தரைப்பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண்மணி, சோம்பேறியே! கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது. உழைத்துச் சாப்பிட உனக்கு என்ன கேடு...?என்று திட்டி விரட்டினாள்.


ஒரு பெண், தனது குருவை இப்படித் திட்டிவிட்டாளே..’ என்று சீடரின் மனம் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்தது.

தயவு செய்து எனக்கு உத்தரவு கொடுங்கள். உங்களைத் திட்டிய அந்தப் பெண்ணுக்குச் சரியான பாடம் புகட்டிவிட்டு வருகிறேன்!” என்று ஆனந்தா புத்தரிடம் அனுமதி கேட்டார்.


அவர் ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார்


பிறகு தன் கையிலிருந்த கமண்டலத்தை ஆனந்தாவிடம் கொடுத்துவிட்டு, புத்தர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

மாலை நேரமானது. புத்தர் தனது சீடருடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்


அப்போது வழியில் சீடரின் கையிலிருந்த கமண்டலத்தைப் பார்த்த புத்தர், இது யாருடையது...?என்று கேட்டார். அதற்கு ஆனந்தர், சுவாமி! இது உங்களுடையது!” என்றார்.


உடனே புத்தர் அந்த கமண்டலத்தை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு, இல்லை... இதை உனக்கு அப்போதே பரிசாகக் கொடுத்து விட்டேன். அது உன்னுடையதுதான்...” என்று திரும்பவும் ஆனந்தவிடமே கொடுத்து விட்டார்.

இரவு வந்தது. புத்தர், ஆனந்தாவின் கையிலிருந்த ண்டலத்தைச் சுட்டிக்காட்டி...”இந்தக் கமண்டலம் யாருடையது ..?" என்று மீண்டும் கேட்டார். இதற்கு ஆனந்தா, ஸ்வாமி இது என்னுடையது!” என்றார்.

இதைக் கேட்ட புத்தர் சிரித்துவிட்டார்.

இன்று மாலை உன்னிடம் இதே கேள்வியைக் கேட்டேன். ‘இது உங்களுடையதுஎன்றாய். இப்போதோ, இது என்னுடையதுஎன்கிறாய். ஒரே கமண்டலம் எப்படி உன்னுடையதாகவும், அதே வேளையில் என்னுடையதாகவும் இருக்க முடியும்..?" - புத்தரின் கேள்வியில் சற்றே தடுமாறினாலும் ஆனந்தா நிதானமாக இப்படிப் பதில் சொன்னார்,



சுவாமி கமண்டலத்தைத் தாங்கள் எனக்குப் பரிசாகக் கொடுத்து விட்டதாகச் சொன்னீர்கள் நானும் அதை ஏற்றுக் கொண்டேன்! அதனால் கமண்டலம் என்னுடையது என்றேன்.


ஆனால், முதல் முறை நீங்கள் கமண்டலத்தை கொடுத்த போது அதை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் நீங்கள் கமண்டலத்தைக் கொடுத்திருந்தீர்கள் என்றாலும், உண்மையில் அது அப்போது உங்களுடையது தான்!”

புன்னகையுடன் னந்தாவைப் பார்த்துப் பேசினார் புத்தர்:
இது போல்தான் அந்தப் பெண்மணி என்னைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளை நான் என்னுடையதாக எண்ணி எடுத்துக் கொள்ளவில்லை! எனவே என்னைப்பார்த்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த பெண்மணிக்கே சொந்தம். அதனால்தான் அந்தப் பெண்மணிக்கு நீ பாடம் புகட்ட போகத் தேவையில்லை என்றேன்.

பிறர் உங்களைத் திட்டினால் ஏன் உங்களுடையதாக எடுத்துக் கொள்கிறீர்கள்.

- சுகி. சிவம் கூறக்கேட்டது.

No comments:

Post a Comment