சிந்திப்போம்.

ஹலரத் ஈசா, தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்

அப்போது அவர் சீடர்களை பார்த்து உங்கள் சகோதரன் ஒருவன் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.  அவன் ஆடை காற்றில் விலகிக் கிடக்கிறது. இதை பார்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.அவரின் விலகிய ஆடையை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம் என்று எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

மகிழ்ச்சி அடைந்த ஹலரத் ஈசா” உங்களைப்போல உலக மக்கள் இல்லையே. பிறரிடம் குறை கண்டால் அதை மறைக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுவது இல்லையே அதை ஊர் முழுவதும் பறை சாற்றுகிறார்களே. பிறரது குறைகளை பற்றி சிரித்துப் பேசி அவர்களை இழிவுபடுத்துகிறார்களே” என்றார்.

No comments:

Post a Comment