இறைவனைக் காணமுடியுமா?

ஆசிரியரை பார்த்து மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் இறைவனை காணலாம் என்கிறீர்கள். என் எதிரில் இறைவனைக் காட்டுங்கள் அப்பொழுதுதான் நான் நம்புவேன் என்றான்.

என்னுடன் வா உனக்குக் காட்டுகிறேன் என்ற ஆசிரியர் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றார்.


ஏரிக்கரையை அடைந்த இருவரும் நீரில் இறங்கினார்கள். திடீரென்று அவர் மாணவனுடைய தலையை நீருக்குள் அமிழ்த்தினார். மூச்சுத் திணறிய அவன் துடிதுடித்தான். சில வினாடிகள் சென்றதும் அவர் அவனை விட்டார்.

நீருக்கு மேலே வந்த அவன் பரபரப்புடன் மூச்சை இழுத்துவிட்டான்.

எப்படி இருந்தது? என்று கேட்டார் அவர்.


மூச்சுவிட வேண்டும் என்று நான் துடிதுடித்துவிட்டேன் என்றான் அவன்.

நீருக்குள் இருந்தபோது முச்சுவிட எப்படி துடித்தாயோ அப்படிப்பட்ட உயிர்துடிப்பு இறைவனைக் காணவேண்டும் என்று உன்னுள் எழ வேண்டும். அப்படி எழுந்தால் நீயும் இறைவனைக்காணலாம் என்றார் அவர்.

-வாரியார் சுவாமிகள் கூறியது.

No comments:

Post a Comment