இறைவனுக்கு ஒரு கேள்வி

இறைவனுக்கு ஒரு கேள்வி

இறைவன் மனிதனை ஏன் இப்படி படைத்தான் என்றே எனக்குப் புரியவில்லை. பல எற்றதாழ்வுகளுடன் மனிதனை அவன் படைக்கத்தான் வேண்டுமா?
இதற்கு அவன் மனிதனை படைக்காமலே இருக்கலாமே.

இறைவன் இரக்கமுள்ளவன் என்றால் ஏன் இப்படி பணக்காரர்களாக சிலரையும் எழையாக பலரையும் கண் இல்லாதாவர்களாக கால் இல்லாதவர்களாக கை இல்லாதவர்களாக மற்றும் பல உறுப்புகள் இல்லாதவர்களாக சிலரையும் படைத்து, அவர்களை இந்த உலகத்தில் சிரமத்துடன் சாகும்வரை வாழவைத்து, அப்படி என்ன சாதித்துவிட்டான் என்று எனக்கு புரியவில்லை. இதில் அவனுக்கு என்ன இன்பம்? அவ்வளவு குரூரப்புத்தி உள்ளவனா இறைவன்?
அப்படி என்றால் அவன்...
நல்லவனா?
கெட்டவனா?
நல்லவன், கெட்டவன் என்பதை எதைவைத்து தீர்மாணிப்பது.


ஒரு தாய்க்கு தனது மகன் கொலைகாரனாக இருந்தால்கூட
அவன் நல்லவன் தான், அவனது கெட்டநேரம் இப்படி செய்துவிட்டான் என்றுதான் கூறுவாளேதவிர தனது மகனை ஒரு கொலைகாரன் என்று கூற தாயின் மனம் முன்வராது.

அதனால் ஒருவர் பார்க்கும் பார்வையில்தான் நல்லவர் கெட்டவர் என்பது தீர்மாணிக்கப்படுகின்றதே தவிர உண்மையில் அதைதீர்மாணிக்க ஒர் அளவுகோள் கிடையாது. அதனால் நல்லவர் கெட்டவர் என்பதைவிட்டுவிடுவோம்.

அவன் தான் படைத்து அனுப்பிவிட்டான் நாமாவது ஒற்றுமையாக வாழ்வோம் என்றால் அதற்கும் வழி இல்லை.

இறைவன் குறைகளோடு மனிதனைப் படைத்து அனுப்பிவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் உள்ளத்தில் ஒற்றுமையின்மையும் பொறாமையும் வஞ்சகமும் குடிகொள்ளவைத்து அனுப்பிவிட்டானே.
இதனால்தான் இங்கு எல்லோருமே ஒருவரை ஒருவர் வெட்டுவதும் குத்துவதும் அடுத்தவன் வாழ்வை கெடுப்பதும் என்று வாழ்கின்றார்கள்.


இது இந்த கடவுளுக்கு தேவைதானா. நாம் என்ன கெடுதல் செய்தோம் இறைவனுக்கு. இப்படி படைத்து, இங்கு அனுப்பி, நாம் துன்பப்படுவதற்க்கு.

ஒருவர் ஞானோதயம் பெற்று கூறுகின்றார் ஆசையை விடு, ஆனந்தம் பெறலாம்” ஆசையில்லாமல் ஒரு வாழ்க்கை மனிதனுக்கு உண்டா?


அடுத்தவனுக்கு கொடுத்து உதவலாம் என்றாலும் அதுவும் ஒர் ஆசையே. அப்படி இருக்கும்போது ஆசை இல்லாமல் ஏது வாழ்க்கை?

இந்த ஆண்டவனிடம் தான் அனைத்து சக்தியும் இருக்கிறதே. அவன் ஒரு நொடியில் இந்த உலகில் உள்ள மனிதர்களை ஒற்றுமைஉள்ளவர்களாகவும் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் அடுத்தமனிதனை கெடுத்துவாழாதவர்களாகவும் மாற்றலாமே.

அதை ஏன் இந்த இறைவன் செயல்படுத்தாமல் இருக்கிறான்.
மனிதன் மகிழ்ச்சியோடு வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்காதா?
ஏன்? ஏன்? ஏன்? ஆண்டவனே இப்படி கீழ்த்தரமாக மனிதனை ஏன் படைக்கின்றாய்?


1 comment:

  1. உங்கள் கருத்துக்கள் எனது சிந்தனையை தூண்டியது உண்மை.

    ReplyDelete