படித்ததில் பிடித்தது

மிகப் பெரிய பயம் எதுவாக இருக்கமுடியும்?


மரணத்தைப் பற்றிய பயம்தான்.

இல்லை, மரணத்தைத் தாண்டிய பயம் இருக்கின்றது.
மரணத்தை பற்றிய பயமாவது எதிர்காலம் பற்றியது. அது நம்மைபாதிக்கப் போவதும் எதிர்காலத்தில்தான். ஆனால், தினம் தினம் மனிதனைச்சாகடிக்கும் பயம் இருக்கின்றது.

பலர் தங்களின் வாழ்வையே இந்த பயத்திற்காக குழிதோண்டி புதைக்கிறார்கள்.

அப்படியென்ன பயம்?

தங்களின் அந்தஸ்து பற்றிய பயம்தான். அது தங்களின் பெயர் கெட்டுபோய் விடக்கூடாது என்பதற்காகவும் மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவும் அவர்கள் படும்பாடு இருக்கிறதே அது சொல்லிமாளாது.

தன் அந்தஸ்தையும் தன் பெயரையும் கட்டி காக்க துடிப்பவர்களுக்கு ஒர் உண்மை தெரிவதே இல்லை.

எந்த உண்மை?

இப்போது மட்டும் நம்மை மற்றவர்கள் நல்லவர்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா என்ன? நம்மை நல்லவர்களாக நினைப்பவர்கள், நாம் அவருக்குமுன் நல்லவர்தான் என நிருபிக்காவிட்டால்கூடநம்மை நல்லவராக பார்க்க முடியும்.

அதேபோலனம்மை நல்லவர்கள் என நம்பாதவர்களிடம் நம்மைப் பற்றி எவ்வளவுதான் நல்லவிதமாக எடுத்துச்சொன்னலும் அது நடக்காது.

இந்த உண்மையை அறிந்த பிறகு அந்தஸ்தைக் காப்பாற்ற நாம் செய்வதெல்லாம் வேலையில்லாதவேலை என்பது புரியும்.

அந்தஸ்து, பெயர், புகழ் என்பதெல்லாம் அவை நம்மிடம் இருக்கும்வரை இருக்கும். நம்மிடம் இருந்து அவை போகும்போது அவற்றை யாரலும் தடுக்கமுடியாது.

இந்த வாழ்வில் அறிவியல், கலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்கள்தான் தன் அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்க்காக தன் ஆயுளையே அடகு வைக்கவும் தயாராகயிருப்பார்கள்.

மற்றவர்கள் பேச்சும் ஏச்சும் தங்களின் பெயரை பாதித்து விடக்கூடாதே என்ற ஒரு பயத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒரு நாளின் ஒவ்வொருபடியையும் பயந்து பயந்து தான் அணுகுகின்றார்கள். பேசுவதையும் சிரிப்பதையும் கூட இதனால் அளந்தேதான் செய்கின்றார்கள்.

இந்த பயத்தை ஒருவர் தாண்டிவிட்டாரென்றால் மரணபயம் என்பதெல்லாம் அவரின் கால் தூசுக்குச் சமமாகாது. பயத்தை தாண்டுபவர் பலம் வாய்ந்தவராகி விடுவார்.

நாம் பயப்படும் வரைதான் பயத்திற்கே நம்மைப் பயப்படுத்தும் சக்தியிருக்கிறது.

No comments:

Post a Comment