படித்ததில் பிடித்தது-7

நாகரிகமானவராக வளருவோம்

வெற்றி வியர்வையினால்தான் எழுதப்படுகறது.

சாதனைக்கட்டிடம் வேதனைக்கற்களினால்தான் எழுந்து விளங்குகிறது.

நாகரிகம் தெரிந்தவர்கள் பண்புள்ளவர்கள் பொருளும் அளிப்பார்கள் மன்னிப்பும் அளிப்பார்கள்.

நாகரிகமில்லாதவர்கள், பண்பு இல்லாதவர்கள் நன்றியில்லாமல் நடந்து கொள்வார்கள்: தீமை செய்வார்கள்: வாங்கிக் கொள்வதிலேயே குறியாய் இருப்பார்கள்; வாங்கிக் கொண்டதை மறந்து விடுவார்கள்.

முந்தின ரகத்தைச் சேர்ந்தவராய் இருந்தால் உயர்வு அடையலாம், வெற்றி பெறலாம், மகிழ்ச்சி அடையலாம்.

பிந்தின ரகத்தைச் சேர்ந்தவராய் இருந்தால் சமூகத்தின் அருவருப்புக்கும் அலட்சியத்திற்கும் ஆளாகி, குறிகிய கால வெற்றிக்குப் பின்னர் தனிமையிலே தவித்து, சோகத்திலே மூழ்கி துயரப்பட வேண்டியிருக்கும்.

உள்ளபடிக்கு வாழ்க்கையில் நாம் இருவகை மனிதர்களைத்தான் சந்திக்கிறோம். நாகரீகம் உள்ளவர்கள், நாகரீகம் அற்றவர்கள்.

நாகரீகம் உள்ளவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் மகிழ்ச்சி உண்டாகும்.

நாகரீகம் இல்லாதவர்கள் எப்போது போகிறார்களோ அப்போதுதான் மகிழ்ச்சி உண்டாகும்.

வருங்காலத்தில் உங்களுக்கு எது தேவை என்பதைத் தீர்மானித்து அதை அடையப் பாடுபடுங்கள்.

சுவாரஸ்யமான மனிதர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் சுவாரஸ்யம் காண்பார்கள்.
அறுவையான மனிதர்களுக்கு அவர்களது சொந்த வாழ்க்கையே அறுவையாக இருக்கும்.

என்றைக்கு உங்களைப் பார்த்து நீங்களே முதன் முதலாக சிரித்துக் கொள்கிறீர்களோ, அன்றைக்கு நீங்கள் வளரத் துவங்குகிறீர்கள்.

சிரியுங்கள்; வளருங்கள். நாகரிகமானவராக, பண்புள்ளவராக வளருங்கள்.

-சுவாமி சின் மயானந்தர்.

No comments:

Post a Comment