படித்ததில் பிடித்தது-6

மன்னித்தல்

மன்னித்தல்,அதில்தான் இருக்கிறது, ஓர் ஆன்மீக சாதகனது வாழ்க்கையில் உள்ள ரகசிய அழகு.  

மன்னிக்கவிடில், கோபதாபங்கள் உள்ளேயே கனத்துக்கொண்டிருக்கும். 

இதயம் லேசாக இருந்தால்தானே நம்மை நாமே உயர்த்திக்கொண்டு தியான சிகரங்களை எட்டிப் பிடிக்க முடியும்.

பகைவர்களை தாராளமாக மன்னித்து விடுங்கள் சொல்லப்போனால், அந்த அளவுக்கு வேறு எதனாலும் எரிச்சல் மூட்ட முடியாது!

அவர்களைத் திரும்பத் தாக்குவீர்கள், மறுபடியும் உதைத்து உங்கள் விலா எலும்புகளை முறிக்கலாம் என்று அவர்கள் திட்டம் போட்டு எதிர்பார்த்திருக்கிறார்கள்.  நீங்கள் அவர்களை மன்னித்ததும் உங்களை நையப்புடைப்பதற்கு அவர்கள் வகுத்த திட்டம் எல்லாம் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன.

முழு மனத்துடன், அன்போடு மன்னிக்கப்பட்ட பலவிரோதிகள் உண்மையான நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள்.

ஏதோ ஞாபகமாகத் துளசி இலைகளை கசக்கும் போது உண்டாகிறதே மணம், அதுதான் மன்னிப்பு.

வெட்டும் கோடாரிக்குக் கூடச் சந்தன மரம் மணம் ஊட்டுகிறது.

கல்லில் இட்டுத் தேய்க்கத் தேய்க்க அதன் வாசனை பரவுகிறது.

பொசுக்குங்கள் சுற்று வட்டாரத்தில் எல்லாம் அதன் பெருமை மிதக்கும்.
  
இதுதான் வாழ்க்கையில் மன்னிப்பின் வசீகரம். -சுவாமி சின் மயானந்தர்.

No comments:

Post a Comment