படித்ததில் பிடித்தது-3

வாழ்க்கைக்கு பணம் அவசியாமா?
பணம் அவசியமானதுதான்.  இருக்க இடம் உடுக்க உடை உயிர்வாழ்வதற்கு உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பெறவும் மானமுடன் வாழவும் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது.

‘எனக்கு ஆசை எதுவும் கிடையாது. எனக்கு பணம் தேவை இல்லை’ என்று சொல்லிக்கொள்வதில் சிலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள் வேதனை நிறைந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வர வேண்டியிருக்கும். 

வாழ்க்கையில் பணம் தேவைதான், ஆனால் பணம் சம்பாதிப்பது ஒன்றே ஒருவனுடைய முழு வாழ்க்கையை பரிணமிக்கும்படி அனுமதிக்கக் கூடாது.

பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்க்கையை சிறிது கூட அனுபவிக்காமல் தன்னை அழித்துக்கொள்வது முட்டாள்தனமாகும்.

நிறைய பணம் இருந்தால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடைந்துவிட முடியும் என்று பலர் தப்புக் கணக்கு போட்டு வருகிறார்கள்.

பணத்தைக் கொண்டு விலையுயர்ந்த மருந்துகளை வாங்கலாம் ஆனால், ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை விலைக்கு வாங்கமுடியாது.

விலையுயர்ந்த பரிசுகளை அடிக்கடி கொடுத்து ஒருவனுடைய நட்பை அடைய முடியாது.

தன் மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டவனுக்குத்தான் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.

உலகில் இருக்கும் நல்ல அம்சங்கள் ஒன்றுகூட வியாபாரப்பொருள் அல்ல.

பணம் சம்பாதித்து வசதியாகவும் கெளரவமாகவும் வாழ ஆசைப்படுவது தவறு அல்ல.

ஆனால் ஒருவன் சம்பாதிக்கும் பணம் நேர்மையான வழிகளில் சம்பாதித்ததாக இருக்க வேண்டும். தவறான வழிகளில் திரட்டிய பணம் சர்வ நாசத்தையே ஏற்படுத்தும்.

நிறைய தேவைகளை கொண்ட பணக்காரன் ஏழையைப் போன்று அவலமாக வாழ்ந்து வருவான்.  குறைந்ததேவைகளைக் கொண்ட ஏழை மன நிறைவுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவான்.No comments:

Post a Comment