படித்ததில் பிடித்தது-2

எதை இழந்து எதைப்பெறுகிறோம்.
ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள். 
காலையில் எழுந்தவுடன் அழகாக எழுந்துவரும் சூரியனை ரசிக்க நமக்கு மனமில்லை. குழந்தையோடு கொஞ்ச நேரம் கொஞ்சிவிளையாட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.
பணம் பணம் பணம் இந்த ஒன்றுக்காக நம் வாழ்க்கையின் சகலவிதமான அற்புதங்களையும் இழந்து அல்லல்படுகிறோம்.
நீங்கள் என்னதான் ஓடியாடி உழைத்தாலும் லட்ச லட்சமாக, கோடி கோடியாக சம்பாதித்தாலும் உங்களுக்கு மிஞ்சப்போவது என்ன?

சில கார்களும் பங்களாக்களும்தான்.
இந்த உயிரற்ற பொருட்களுக்காக நீங்கள் எதை விலையாக கொடுக்கின்றீர்கள் தெரியுமா?
இறைவன் உங்களுக்கு வரப்பிரசாதமாக கொடுத்த வாழ்க்கையை!  அந்த வாழ்க்கையை அனுபவிக்க கொடுத்த ஆனந்த சக்தியை.
ஒரு கணக்குக்காகப் பார்த்தாலும் கூட உயிரற்ற பொருட்களை வாங்க உயிருள்ள வாழ்க்கையைத் தருவது எவ்வளவு பெரிய அநியாயம்!.
சாதிக்க வேண்டும் என்று நினைத்து கிளம்புகிறவர்கள் ஒரளவு சாதித்த பிறகு இன்னும் இன்னும் என்று சென்று கொண்டே இருக்கிறார்கள். எத்தனை சாதித்த பிறகும் திருப்தி அடையாதது கண்டு ’எந்த சாதனையும் செய்யாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே’ என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
 பணம் நிறைய இருப்பதால் டாம்பீகமாக வாழ்வதால் ஆனந்தமும் திருப்தியும் கிடைத்துவிடாது.  ஆனந்தமும், திருப்தியும்,  உள்ளதுபோதும் என்று தன்னையும் தன்சூழ்நிலையையும் மதித்து வாழ்பவனுக்கே சொந்தம்.
நமக்குத் தெரியாது என்ற ஒரு விஷயம் தெரியாத வரை, நமக்கு தெரியாது என்ற ஒருவிஷயம் நமக்கு தெரியவே தெரியாது
நமக்குத் தெரியாது என்ற ஒரு விஷயம் தெரிந்தால் குறைந்தது நமக்கு தெரியாது என்ற ஒரே ஒரு விஷயமாவது நமக்கு தெரியவரும்.
உலகில் தெரியாது என்று தெரிந்து கொண்டவர்களைவிடதெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மூடர்கள்தான் அதிகம்.

No comments:

Post a Comment